அருணாச்சல பிரதேச இளைஞர்கள் 5 பேரும் விடுவிப்பு.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பீமா!

by Sasitharan, Sep 12, 2020, 20:12 PM IST

இந்திய சீன எல்லை பிரச்னை உக்கிரமாக இருந்து வரும் இந்த சூழ்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அருணாச்சல பிரதேச மாநிலம் உப்பர் சுபான்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை காணவில்லை என்ற தகவல் வெளியாகியது. அவர்களை சீன ராணுவத்தினர் கடத்திச் சென்றதாக தகவல் வெளியானதால் எல்லை பிரச்னை மீண்டும் பற்றி எரிய ஆரம்பித்தது. இது தொடர்பாக கண்டங்கள் வார்த்தை மோதல்கள் உருவாகத் தொடங்கின. இந்நிலையில்தான், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரும், அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு, இந்த விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், ``காணாமல் போன இளைஞர்கள் தங்கள் பகுதிக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய ராணுவம் அனுப்பிய ஹாட்லைன் செய்திக்கு சீனா ராணுவம்பதிலளித்துள்ளது. மேலும் 5 இளைஞர்களும் வழிதவறிச்சீன பகுதிக்குள் சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று கூறியிருந்தார். இதற்கிடையே, இந்திய ராணுவம் தொடர்ந்து எடுத்துவந்த முயற்யால், இளைஞர்கள் அனைவரும் இன்று பாதுகாப்புடன் சீன ராணுவத்திடம் இருந்து மீட்டுள்ளது. மேலும், 5 இளைஞர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட பிறகு, கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இதுதொடர்பாக அருணாச்சலப்பிரதேச முதல்வர் பீமா கண்டு ட்விட்டரில் ``சீன ராணுவத்தால் அருணாச்சலப் பிரதேச 5 இளைஞர்களும் பிடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களை பாதுகாப்புடன் மீட்ட இந்திய ராணுவத்திற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். மத்திய அரசே இளைஞர்கள் அனைவரும் தவறுதலாக சென்றுவிட்டனர் என்று கூறிய நிலையில் பீமா கண்டு மீண்டும் சீன ராணுவம் பிடித்துவிட்டது எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை