மத்திய அரசின் சார்பில் 15 ஆகஸ்ட் 2015 ல் Startup_india என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் தயாரிப்பபோம் என்ற முழக்கத்தோடு உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் இளைஞர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதே . அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை மத்திய வர்த்தகம் , தொழில்கள் மற்றும் இரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார்.
இந்த பட்டியல் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையால் தயாரிக்கப்படுகிறது.
ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம் எனப்படும் புது நிறுவைங்கனள
தொடங்குவதற்கான சூழலுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு காரணிகளை
அடிப்படையாக கொண்டு, மாநிலங்களின் இந்த தரவரிசைப் பட்டியலை
மத்திய அரசு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
இந்தியாவில் ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவித்து சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கர்நாடகம் மற்றும் கேரளா முதலிட்த்தில் உள்ளன.
புதிய தொழில் தொடங்குவதற்கான சிறந்த தலைமைகளை கொண்ட
மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ் டிரா, பீகார், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய
மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
ஸ்டார்ட் - அப் ஈகோ சிஸ்டத்தில் வளர்ந்துவரும் மாநிலங்களின் பட்டியலில்
தமிழகம், ஆந்திரபிரதேசம், அசாம், சத்தீஸ்கர், டெல்லி, உத்தரப்பிரதேசம்,
மத்திய பிரதேசம், இமாசலப்பிரதேசம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.