கடந்த 6 வருடங்களில் இந்தியாவில் ஏற்பட்ட ஒரேயொரு வளர்ச்சி எது தெரியுமா?

by Nishanth, Sep 15, 2020, 21:00 PM IST

கடந்த 6 வருடங்களில் இந்தியாவில் வளர்ந்துள்ளது பிரதமர் மோடியின் தாடி மட்டுமே என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறி உள்ளார்.காங்கிரஸ் எம்பியான சசிதரூர் அவ்வப்போது ஏதாவது பரபரப்பு தகவல்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரமான ஒரு புதிய தலைவர் வேண்டும் என்று கூறி காங்கிரஸ் கட்சியிலேயே சமீபத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இவர் சமூக இணையதளங்களில் வெளியான மோடியின் ஒரு கிராபிக்ஸ் படத்தைப் பகிர்ந்து சில கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: இன்று காலை தான் பிரதமர் மோடியின் இந்த கிராபிக்ஸ் படம் எனக்குக் கிடைத்தது.

கடந்த 6 வருடங்களில் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்று விட்டோம் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால் கடந்த 6 வருடத்தில் இந்த கிராபிக்ஸ் படத்தில் உள்ளதைப் போல மோடியின் தாடி மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இதுதவிர எந்தத் துறையிலும் இந்தியா வளர்ச்சி பெறவில்லை. எனக்கு எதிரான விமர்சனங்களை வரவேற்கிறேன் என்று மோடி கூறுகிறார். ஆனால் மோடியை விமர்சித்ததின் பேரில் பலர் அனுபவித்து வரும் இன்னல்களைக் குறித்து அவர் கருத்து கூற மறந்து விடுகிறார். சொந்த குடிமகன்களுக்கு எதிராகத் தான் தனது பழிவாங்கும் படலத்தை அவர் நடத்தி வருகிறார். இந்தியாவின் இறையாண்மைக்குச் சவால் விடும் நாடுகளுக்கு எதிராக அவர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று சசிதரூர் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE ABOUT :

More India News