இதுவரை 22,351 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 வீரர்கள் மரணமடைந்துள்ளதாகவும் ராஜ்யசபாவில் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறினார்.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக தினசரி நோயாளிகள் எண்ணிக்கை இந்தியாவில் 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டிவிட்டது. இறந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. கொரோனாவுக்கு டாக்டர்கள், நர்சுகள் உள்பட சுகாதார துறையினரும், போலீசாரும், ராணுவத்தினரும் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் ராஜ்யசபாவில் கூறியது: இதுவரை 22,353 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பரவியுள்ளது. இதில் 35 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 32 பேர் தரைப் படையையும், 3 பேர் விமானப் படையையும் சேர்ந்தவர்கள்.
கடந்த 2010 மற்றும் 2019 இடையே 1,123 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் 901 பேர் தரைப் படையையும், 182 பேர் விமானப் படையையும், 40 பேர் கடற்படையையும் சேர்ந்தவர்கள் ஆவர். ராணுவ வீரர்கள் தற்கொலை செய்வதற்கு அவர்களது சொந்த பிரச்சினைகள் தான் காரணமாகும் என்று அவர் கூறினார்.