13 ஐபிஎல் சீசனின் இரண்டாவது போட்டி துபாய் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
விறுவிறுப்பாக தொடங்கிய ஐபிஎல் சீசனின் முதல் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் அதில் சென்னை அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது போட்டி மிக எதிர்பார்ப்போடு இன்று நடைபெறவுள்ளது.
இரண்டு அணிகளும் திறமையான வீரர்களை கொண்டுள்ளதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
டெல்லி கேப்பிட்டல் :
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் , பிரித்வி ஷா , ஷிம்ரன் ஹெட்மயர் , ரிஷாப் பண்ட் மற்றும் சந்திப் லாமிச்சன் என இளைஞர்களின் பட்டாளம் அணிக்கு பலத்தை சேர்க்கும்.
மேலும் ஷிக்கர் தவான் ,மார்க்கஸ் ஸ்டேய்னஸ் , கீமோ பால் , அலெக்ஸ் கேரி , இஷாந்த் ஷர்மா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணிக்கான உத்வேகத்தையும் , பலத்தையும் தருவார்கள்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஷிம்ரன் ஹெட்மயர், சந்தீப் லாமிச்சன் மற்றும் கீமோ பால் இருவரும் கரீபியன் லீக் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டனர் . மேலும் அலெக்ஸ் கேரி , மார்க்கஸ் ஸ்டேய்னஸ் இருவரும் கடந்த வாரம் இங்கிலாந்து உடன் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளனர். எனவே இந்த அனுபவங்கள் அணிக்கு கை கொடுக்கும்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். அணியின் கேப்டனாக உள்ள கேஎல் ராகுல் பேட்டிங்கிலும் கீப்பரிலும் சிறப்பாக செயல்படுவார் . மயங்க் அகர்வால் ,நிகோலஸ் பூரான் , கிளன் மேக்ஸ்வெல் , சர்வார்ஸ் கான் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட அணியாக உள்ளது .
பந்து வீச்சை பொறுத்தவரை கிரிஸ் ஜோர்டன் , ஷெல்டன் கார்டெல் , ஜேம்ஸ் நீஷம் , முகமது ஷமி மற்றும் முஜிபீர் ரகுமான் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணிக்கு பலத்தை தரும் .
ஆடுகளத்தை பொறுத்த வரை வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
மேலும் இந்த ஆடுகளத்தில் இதுவரை நடந்த 52 ஆட்டங்களில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த அணி 25 முறையும் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 27 முறையும் வென்றுள்ளது .
இவ்விரு அணிகளும் பலம் வாய்ந்த அணியாக உள்ளதால் ஆட்டத்தின் வெற்றி போட்டியின் போதான சாதகபாதகங்களை பொறுத்தே அமையும்.