5 ஸ்டார் ஓட்டலில் சுற்றுலா வழிகாட்டி கூட்டு பலாத்காரம்..!

by Nishanth, Sep 21, 2020, 13:25 PM IST

டெல்லியில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஓட்டலில் சுற்றுலா வழிகாட்டி 6 பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியைச் சேர்ந்த 26 வயதான இளம்பெண் அங்குள்ள ஒரு தனியார் சுற்றுலா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். டெல்லிக்குச் சுற்றுலா வருபவர்களுக்கு விமானம், பஸ், ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்து கொடுப்பது மட்டுமல்லாமல் 'டூரிஸ்ட் கைடா'கவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரது நிறுவனத்திற்கு 2 பேர் வந்து சுற்றுலா குறித்த விவரங்களைக் கேட்டனர். அப்போது அந்த நபர்கள் அந்த இளம்பெண்ணுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.இதில் அந்த இளம்பெண்ணுக்குச் சிறிது பணத் தேவை இருந்ததை அவர்கள் புரிந்து கொண்டனர்.

இதையடுத்து தங்களுக்குத் தெரிந்த குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஒருவர் இருப்பதாகவும் அவரை அணுகினால் பணம் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதை அந்த இளம் பெண்ணும் நம்பியுள்ளார். மறுநாள் அந்த இளம்பெண்ணைச் சந்திக்க வந்த அவர்கள் அங்குள்ள ஒரு 5 ஸ்டார் ஓட்டலில் குறிப்பிட்ட நபர் இருப்பதாகவும், அவரிடம் சென்றால் பணம் வாங்கலாம் என்றும் கூறினர். அதை நம்பிய அந்த இளம்பெண் அவர்களுடன் ஓட்டலுக்குச் சென்றார். ஆனால் அறையிலிருந்த 6 பேர் கும்பல் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தது.இந்த கும்பலுடன் ஒரு பெண்ணும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த இளம்பெண் டெல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் சராயி பகுதியைச் சேர்ந்த மனோஜ் சர்மா என்பவரைக் கைது செய்தனர். மற்ற 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.comMore India News

அதிகம் படித்தவை