சூப்பர் ஓவரின் மூலம் வெற்றியை ருசித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் !

Delhi Capitals taste victory with Super Over!

by Loganathan, Sep 21, 2020, 14:21 PM IST

ஐபிஎல் லீக்கின் இரண்டாவது ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்கு துபாய் கிரிக்கெட் ஆடுகளத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.ராகுலின் இந்த பந்து வீச்சு முடிவு சாதகமான ஒன்றாகும்.

முதலில் பேட்டிங்குக்கு களமிறங்கிய டெல்லி கேப்பிட்டஸ் அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஷிக்கார் தவான் இருவரும் அவர்களின் மீதான எதிர்பார்ப்பைத் தவிடுபொடியாக்கினர். இரண்டாவது ஓவரில் ரன் அவுட் ஆகி நடையைக் கட்டினார். கூடவே பிரித்வி ஷா ம் ஷமி வீசிய நான்காவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஜோர்டன் இடம் ஸ்ட்ரைட் திசையில் கேட்ச் ஆகி வெளியேறினார். 9/2 என்ற நிலையில் தடுமாறிய டெல்லி அணி.

இந்நிலையில் ஹெட்மயர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கைகோர்த்த நிலையில் அதே நான்காவது ஓவரின் கடைசி பந்தில் ஹெட்மயர் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வாலிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அணியின் ரன்னானது 13/3 என்ற நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷாப் பண்ட் இருவரும் இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடினர் . மிக நேர்த்தியான பந்துகளைத் தேர்வு செய்து அடித்து ஆடிய இருவரும் அணியின் ஸ்கோரை 86 ரன்னுக்கு உயர்த்தினர்.இந்நிலையில் ரவி பிஷோனாய் வீசிய 14 வது ஓவரின் கடைசி பந்தை தவறான முறையில் தேர்வு செய்ததால் போல்ட் ஆகி 31(4 பவுண்டரி ) ரன்னில் வெளியேறினார் ரிஷாப் பண்ட் .ஒருபுறம் சுமாராக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் உடன் மார்க்கஸ் ஸ்டேய்னஸ் கைகோர்த்தார் . ஆனால் அடுத்த 14 வது ஓவரை வீசிய ஷமியின் முதல் பந்தில் சுமாரான ஷாட் தேர்வினால் ஜோர்டானிடம் கேட்ச்சாகி வெளியேறினார்.

பின்னர் ஸ்டேய்னஸ் உடன் அக்சர் பட்டேல் களமிறங்கினார். ஒருபுறம் ஸ்டேய்னஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஒருபுறம் விக்கெட் சரிந்து கொண்டே இருந்தாலும் தனது அதிரடியால் ஸ்டேய்னஸ் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.20 வது ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட் முறையில் ஸ்டேய்னஸ் 53 ( 7 பவுண்டரி , 3 சிக்சர் ) ரன்களில் அவுட்டானார்.20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 157/8 ரன்களை குவித்தது.158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான் லோகேஷ் ராகுலும் , மயங்க் அகர்வாலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மொகித் ஷர்மா வீசிய 5 வது ஓவரின் 3 பந்தைத் தவறவிட்ட ராகுல் போல்ட் ஆகி 21 ( 2 பவுண்டரி , 1 சிக்சர் ) ரன்களில் வெளியேறினார்.30/1 என்ற நிலையில் அகர்வால் உடன் கருண் நாயர் இணைந்து தனது இன்னிங்சை தொடங்கிய போது 6 வது ஓவரை வீசிய அஷ்வின் பந்தில் சுவீப் ஷார்ட்டை அடிக்கும் போது பிரித்வி ஷா விடம் கேட்ச் ஆகி வெளியேறினர். பஞ்சாப் அணியின் வெற்றிவாய்ப்பு இதனால் கைநழுவ ஆரம்பித்தது.ஆனால் ஒருபுறம் நிதானமாக ஆடிய அகர்வால் தனது தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார் .

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் , கடைசி ஓவரை ஸ்டேய்னஸ் வீசத் தயாரானார் . மிகச் சிறப்பாக பேட்டிங் ஆடிக்கொண்டு இருக்கும் அகர்வால் உடன் ஜோர்டன் களத்தில் இருந்தனர்.அகர்வால் 20 வது ஓவரின் முதல் பந்தை மிட் ஆன் திசையில் சிகசருக்கு அடிக்க 5 பந்திற்கு 7 ரன்கள் தேவைப்பட்டது . வெற்றி வாய்ப்பானது பஞ்சாப் அணியிடமே இருந்து . பின்னர் இரண்டாவது பந்தில் 2 ரன்கள் எடுக்க ஆட்டத்தின் போக்கில் விறுவிறுப்பு எகிறியது.மூன்றாவது பந்தை ஆஃப் திசையில் இலாவகமாக பவுண்டரி அடிக்க அணியின் ஸ்கோர் 157 /6 என்ற சமநிலையை எட்டியது .

மூன்று பந்திற்கு 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 4 பந்து டாட் பாலாக மாறியது . எனினும் அகர்வால் களத்தில் இருந்ததால் மிக சுலபமாக வென்றுவிடலாம் என்ற பஞ்சாப்பின் கனவைத் தனது ஐந்தாவது பந்தில் மிட் ஆஃப் திசையில் அகர்வாலை அவுட் ஆக்கி தவிடுபொடியாக்கினார் ஸ்டேய்னஸ்.இருப்பினும் கடைசி பந்தில் 1 ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தில் ஜோர்டன் விக்கெட்டை வீழ்த்த போட்டியானது டிராவில் முடிந்தது.

ஸ்டேய்னஸ்ன் சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் பஞ்சாப்பின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.பின்னர் இந்த சீசனின்ஸ முதல் சூப்பர் ஓவர் நடைபெற்றது .முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் களம் கண்டது. ராகுல் மற்றும் பூரன் இருவரும் களம் கண்டனர். ரபாடா வீசிய முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த பந்தில் கேட்ச் ஆனார் ராகுல் 2/1 என்ற நிலையில் பூரான் உடன் மேக்ஸ்வெல் இணைந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாகப் பூரான் அவர்களும் போல்ட் ஆனார்.இதனால் சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2/2 நிர்ணயிக்கப்பட்டது.ஐபிஎல் சீசனில் சூப்பர் ஓவரில் எடுக்கப்பட்ட மிகக் குறைந்தபட்ச ரன் இதுவாகும்.3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஸ்ரேயாஸ் மற்றும் பண்ட் களமிறங்கினர். ஷமி வீசிய இரண்டாவது பந்து அகலப் பந்தாக அடுத்த பந்தில் இலக்கை அடைந்து வெற்றி வாகை சூடினர் டெல்லி கேப்பிட்டல்ஸ்.

You'r reading சூப்பர் ஓவரின் மூலம் வெற்றியை ருசித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ! Originally posted on The Subeditor Tamil

More Ipl league News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை