ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முன்னர் சிவன் கோவிலாக இருந்தது என்று பாஜக-வின் மூத்தத் தலைவரும், எம்.பி.யுமான வினய் கத்தியார் பேசியுள்ளார்.
“ஆக்ராவில் இருப்பது தேஜோ மஹால் (சிவன் கோவில்). ஆரம்பத்தில் அது சிவன் கோவிலாக இருந்தது; இந்து மன்னர்களால் கட்டப்பட்டதுதான் தாஜ்மஹால்; கோவிலின் கட்டமைப்பை பார்த்தாலே அது சிவன் கோவிலாக இருந்தது தெரியவரும்.
ஒரே ஒரு கல்லறை மட்டுமே இருக்கும் போது, எதற்கு இத்தனை அறைகள் கட்டப்பட்டது. சிவன் கோவிலில்தான் மேலிருந்து கீழே நீர் சொட்டும் வகையில் கட்டப்பட்டிருக்கும். தாஜ்மஹாலில் இந்த அமைப்பும் இருக்கிறது” என்று புதுக்கதை ஒன்றை கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “தாஜ்மஹாலை இடிக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால், தாஜ்மஹாலை நாம் தேஜோ மஹால் என்றே அழைக்க வேண்டும். பிரிட்டிஷ்காரர்கள் நமது அடையாளங்களை அழிக்கவில்லை.. ஆனால், மொஹலாயர்கள் அழித்தார்கள்” என்றார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான வினய் கத்தியார் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.