தாஜ்மஹால் இந்து கோவில் என்பதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன் - சுப்பிரமணியசாமி அடுத்த தாக்கு

தாஜ்மஹால் முன்பு கோவிலாக இருந்தது தொடர்பாக தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும் அவற்றை விரைவில் வெளியிடப் போவதாக பாஜக மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

Oct 20, 2017, 13:48 PM IST

தாஜ்மஹால் முன்பு கோவிலாக இருந்தது தொடர்பாக தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும் அவற்றை விரைவில் வெளியிடப் போவதாக பாஜக மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி தாஜ்மஹால் குறித்து தொடர்ந்து புதிது புதிதான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தாஜ்மஹால் குறித்த பாடத்தை, புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக அமைச்சர் கூறியிருந்தார்.

Subramanian Swamy, Taj Mahal

முகலாய மன்னர்கள் துரோகிகள் என்றும், தாஜ்மஹால் ஒன்றும் கொண்டாடப்பட வேண்டிய வரலாறு அல்லவென்றும் எம்எல்ஏ சங்கீத் சோம் கூறியுள்ளார். அதேபோல தாஜ்மஹால் சிவன் கோவிலாக இருந்தது என்று பாஜக-வின் மூத்தத் தலைவரும், எம்.பி.யுமான வினய் கத்தியார் பேசியுள்ளார்.

இந்நிலையில், தாஜ்மஹால் இந்து கோவிலாக இருந்ததற்கு ஆவணங்கள் கிடைத்துள்ளன என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறியுள்ள அவர், “தாஜ்மஹால் தொடர்பாக எனக்கு கூடுதல் ஆவணங்கள் கிடைத்துள்ளன; ஜெய்ப்பூர் ராஜாக்களை மிரட்டியே தாஜ்மஹால் இருக்கும் நிலத்தை ஷாஜஹான் பறித்திருக்கிறார்; இதற்கு ஈடாக 40 கிராமங்கள், ஜெய்ப்பூர் ராஜாக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இது தாஜ்மஹால் நிலத்துக்கு இணையான மதிப்பு அல்ல; மேலும் தாஜ்மஹால் நிலத்தில் ஒரு கோவில் இருந்திருக்கிறது; இந்த கோவிலை இடித்துவிட்டுத்தான் தாஜ்மஹால் கட்டினார்களா எனத் தெரியவில்லை; இதுதொடர்பான ஆவணங்களை விரைவில் வெளியிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading தாஜ்மஹால் இந்து கோவில் என்பதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன் - சுப்பிரமணியசாமி அடுத்த தாக்கு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை