ஓராண்டுக்கு மேல் சிறை.. மெகபூபாவை விடுவிக்க மகள் சுப்ரீம்கோர்ட்டில் மனு.. இன்று விசாரணை..

Supreme Court to hear Mehbooba Muftis daughter petition for release of her mother.

by எஸ். எம். கணபதி, Sep 29, 2020, 09:08 AM IST

காஷ்மீரில் ஓராண்டுக்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியை விடுதலை செய்யக் கோரி, அவரது மகள் தாக்கல் செய்துள்ள மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்படப் பல கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும், மொபைல் மற்றும் தொலைப்பேசி, இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன.

பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஓராண்டு முடிவுற்றும் இது வரை அங்கு மாமூல் நிலை திரும்பவில்லை. முப்தி முகமது சயீத் உள்படப் பலர் இன்னும் சிறைக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், மெகபூபா முப்தியை விடுதலை செய்யக் கோரி அவரது மகள் இல்திஜா, சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். காஷ்மீரில் பல தலைவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தனது தாயையும் விடுதலை செய்ய வேண்டுமென்று அவர் கோரியுள்ளார். இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

You'r reading ஓராண்டுக்கு மேல் சிறை.. மெகபூபாவை விடுவிக்க மகள் சுப்ரீம்கோர்ட்டில் மனு.. இன்று விசாரணை.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை