மோடி அரசு வெற்றிபெற தகவல்களை திருடிய ஃபேஸ்புக் நிறுவனம்!

பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்து வெற்றிக்கு உதவியது போல, மோடி அரசு மத்தியிலும், மாநிலத்திலும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர உதவினோம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா உண்மையை ஒப்புக்கொண்டது.

Mar 22, 2018, 17:50 PM IST

பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்து வெற்றிக்கு உதவியது போல, மோடி அரசு மத்தியிலும், மாநிலத்திலும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர உதவினோம் கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா உண்மையை ஒப்புக்கொண்டது.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜகவிற்கும் இந்த நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த முறைகேட்டில் முதலில் பாஜக கட்சி, காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைத்தது. அதன்படி ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தை பிரபலப்படுத்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனத்தின் உதவியை நாடினார் என்று குறிப்பிட்டது. மேலும், பொய்யான புகழை அதன் மூலம் ராகுல் பெற்றார் என்றும் குற்றச்சாட்டியது.

ஆனால் இந்த முறைகேட்டில் பாஜக கட்சிதான் முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையான 'ஓவலேனே பிசினஸ் இண்டலிஜென்ஸ்' என்ற நிறுவனத்துடன் பாஜக கட்சிதான் தொடர்பில் இருந்துள்ளது. இதை 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் இந்திய சிஇஓ ஒப்புக்கொண்டதும் பெரிய பிரச்சனை ஆகியுள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் பேஸ்புக் தலைமையகம் சென்ற ஒரே பிரதமர் பாஜகவை சேர்ந்த மோடி மட்டுமே. 2014 தேர்தலில் உதவியதற்கான நன்றிக் கடன்தான் இந்த சந்திப்பு என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. மேலும் இதில் நிறைய பணம் கைமாறி இருக்கலாம் என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

இதே சமயத்தில் 'ஓவலேனே பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் 'லிங்க்டின்' பக்கத்தில் முக்கியமான தகவல் இருக்கிறது. அதில் நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக கட்சிக்காக நாங்கள் உதவி செய்தோம். அதன் மூலம் பாஜக கட்சி வெற்றி பெற்றது என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறது.

இந்த 'ஓவலேனே பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனம் மூலம் பாஜக இந்தியா முழுக்க பொய்யான செய்திகளை பரப்பியதாக கூறப்படுகிறது. மேலும் பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து மக்களின் மனநிலையை மாற்றி உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிறுவனத்துடன் ராஜ்நாத் சிங்தான் அதிக நெருக்கமாக இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading மோடி அரசு வெற்றிபெற தகவல்களை திருடிய ஃபேஸ்புக் நிறுவனம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை