குரங்கணி காட்டுத்தீ விபத்து: பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு

Mar 22, 2018, 17:17 PM IST

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்று வந்த சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப் பகுதியில் கடந்த 11ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, டிரெக்கிங் சென்றிருந்த 36 பேர் தீ விபத்தில் சிக்கிச் கொண்டனர். இதில், 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததை அடுத்து அவர்களை சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், பலத்த தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட மற்றவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் மூன்று பேர் அடுத்தடுத்த நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, கடந்த 15ம் தேதி மற்றும் 16ம் தேதிகளில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன், சென்னையைச் சேர்ந்த அணுவித்யா, திருப்பூரைச் சேர்ந்த சத்யகலா, சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி மற்றும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 17ஆக உயர்ந்தது.

இந்நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த ஜெஸ்ரீ இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம், குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading குரங்கணி காட்டுத்தீ விபத்து: பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை