கடந்த செப்டம்பர் 29 ம் தேதி நடக்க வேண்டிய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டியின் கூட்டம் நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்கள் படி, கடந்த 2016-ம் ஆண்டில் பணக் கொள்கைக் கமிட்டி அமைக்கப்பட்டது.இரு மாதங்களுக்கு ஒரு முறை, இந்த கமிட்டியின் கூட்டம் நடக்கும். இந்த ஆண்டு செப் 29, செப் 30, அக் 01 ஆகிய நாட்களில் நடக்க வேண்டிய பணக் கொள்கைக் கூட்டம், ஒத்திவைக்கப்பட்டது.
பணக் கொள்கைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறை ரிசர்வ் வங்கியின் , இந்த கமிட்டியில், 6 உறுப்பினர்கள் உள்ளனர். . இந்த கூட்டத்தை நடத்த, குறைந்தபட்சம் 4 உறுப்பினர்களாவது அவசியம் ஆனால் அரசு நியமித்த 3 உறுப்பினர்களுக்கான காலம், செப்டம்பர் 30ம் தேதி முடிவடைந்தது.
இதனால் திட்டமிட்டபடி கூட்டம் நடத்த முடியாமல் தள்ளிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இப்படி ஒரு சிக்கல் வரும் என்று தெரிந்த உடன் , சில மாதங்களுக்கு முன்பே, ரிசர்வ் வங்கி இந்த கமிட்டியில் இருக்கும், அரசு நியமித்த 3 உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்குமாறு, மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியது. ஆனால் மத்திய அரசு. அதைக் கண்டு கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாது . புதிய உறுப்பினர்களை நியமிக்க, பொருளாதார விவகாரத் துறைச் செயலர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விட்டது.
இந்த குழு நேற்று சஷாங்க் பிடே, அசிமா கோயல், மற்றும் ஜெயந்த் வர்மா ஆகியோரை இந்தக் பணக் கொள்கை கமிட்டி உறுப்பினர்களாக, நியமித்து அறிவிப்பு வெளியிட்டது. இவர்களின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சஷாங்க் பிடே, நேஷனல் கவுன்சில் பார் அப்ளைடு எக்னாமிக் ரிசர்ச் கவுன்சிலின் (National Council for Applied Economic Research) மூத்த ஆலோசகராக இருந்தவர் அசிமா கோயல், இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ரிசர்ச்சில் (Indira Gandhi Institute of Development Research.) பேராசிரியராகப் பணி புரிந்தவர் . ஜெயந்த் ஆர் வர்மா, அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் பேராசிரியராகவும் பணியாற்றியவர் . மற்ற உறுப்பினர்கள் ரிசர்வ் வங்கி கவர்னரான சக்தி காந்த தாஸ், துணைத் தலைவர் மைக்கேல் பத்ரா, ம் நிர்வாக இயக்குனர் ஜனக் ராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். திறன், ஒருமைப்பாடு, பொருளாதார நிலைப்பாடு, பணவியலில் அறிவும் அனுபவமும் உள்ளவர்கள் தான் இந்த குழுவில் உள்ள உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த அடிப்படையில்தான் தான் இந்த மூன்று புதிய உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய உறுப்பினர்கள் நியமனம் மூலம் கூட்டம் நடத்த அடிப்படை சிக்கல் இல்லை என்று தெளிவான நிலையில் அக்டோபர் 07( நாளைமுதல் ) அக்டோபர் 10 வரை, இந்த கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வரையிலான 0 காலாண்டில், இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி, வரலாறு காணாத அளவுக்கு 23.9 சதவிகிதம் சரிந்து விட்டதால் , ரிசர்வ் வங்கியின் இந்த பணக் கொள்கைக் கமிட்டி கூட்டம், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பாக,இன்னமும் ஒரு சுமூகமாக தீர்வு எட்டப்படவில்லை. (வட்டிக்கு வட்டி விவகாரத்தில் நீதிமன்றம் குட்டு வைத்தது வேறு கதை). பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கெனவே வட்டி விகிதம் பல தடவை குறைக்கப்பட்டிருந்தாலும், கடந்த முறை நடந்த கூட்டத்தில் வட்டி விகிதத் தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நாளை நடக்கும் கூட்டத்திலும் கூட வட்டி விகிதங்கள் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.