குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. மைனா நந்தினியின் அழகான குடும்பம்

maina nandhini releases a new born baby photo

by Logeswari, Oct 6, 2020, 17:24 PM IST

மைனா என்பவர் சின்னத்திரை சீரியலில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.இவர் தனியார் தொலைக்காட்சியில் வெளியான சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகிக்கு தோழியாக நடித்து கலக்கல் காமெடியன் என்று பெயர்பெற்றவர்.இதனையடுத்து அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்தார்.அதே சமயத்தில் சில திரைப்படங்களிலும் வலம் வந்து இருக்கிறார்.இவரது முதல் கணவர் இறந்ததையொட்டி பல சர்ச்சையில் மாட்டினார்.அனைத்தையும் கடந்து வந்து தனது நடிப்பை மறுபடியும் தொடர்ந்தார் மைனா நந்தினி.இந்நிலையில் சின்னத்திரை நடிகர் மற்றும் டான்சர் யோகேஷ் உடன் காதல் மலர்ந்தது.பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் ஆகிய பிறகும் இருவரும் தீவிரமாக சீரியலில் நடித்து வந்தனர்.இவர்களின் அன்பு பரிசாக மைனா நந்தினி ஆண் குழந்தையை பெற்று எடுத்தார்.


குழந்தை பிறந்து ஒரே மாதத்தில் மறுபடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கணவன் மனைவியாக ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பினார்.இவர்களின் காமெடி கலந்த நடிப்பு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.பிறந்த குழந்தையுடன் மைனா நந்தினி மற்றும் யோகேஷ் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.தனது குழந்தையின் முதல் புகைப்படத்தை வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் மைனாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

You'r reading குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. மைனா நந்தினியின் அழகான குடும்பம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை