ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்துக்கு கொரோனா தொற்று உறுதி.

Punjab Health Minister Balbir Singh Sidhu has been diagnosed with coronavirus

by Balaji, Oct 7, 2020, 19:33 PM IST

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் சித்து அம் மாநில சுகாதார அமைச்சராகவும் இருந்து வருகிறார்.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் நாடெங்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பஞ்சாபில் நடந்த நிலத்தைக் காப்போம் என்ற பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் முதல்வர் அமரிந்தர் சிங், அமைச்சர் பல்பீர் சிங் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்தஅமைச்சர் பல்பீர் சிங் சித்துக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது.இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. .அவருக்கு பாதிப்பு அதிகம் இல்லாததால் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் எனவும் டாக்டர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More India News

அதிகம் படித்தவை