மத்திய உணவுத் துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சியின் நிறுவுனத் தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் காலமானார். அவருக்கு வயது 74. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.
சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. இந்த நிலையில் இன்று(அக்.8) இரவு சுமார் 8 மணிக்கு அவர் மரணமடைந்தார். இது அவரது மகன் சிராக் பஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். ஜனதா ஆட்சிக் காலத்திலிருந்து முன்னணி எதிர்க்கட்சித் தலைவரான பஸ்வான் பிஎஸ்என்எல், ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு போன்றவற்றின் பின்னணியில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார். நடைபெறவுள்ள பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் மட்டுமே கூட்டணி என்று சிராக் பஸ்வான் அறிவித்திருந்த நிலையில் அவரது தந்தையார் மரணித்துள்ளார். பிகாரிலிருந்து ஜெகஜீவன் ராமிற்குப் பிறகான முக்கிய தலித் தலைவராவார் ராம் விலாஸ் பஸ்வான்.