தமிழகத்தில் கொரோனா பலி 10 ஆயிரத்தை தாண்டியது.. சிகிச்சையில் 44 ஆயிரம் பேர்..

corona deaths crossed 10 thousands in tamilnadu.

by எஸ். எம். கணபதி, Oct 9, 2020, 09:21 AM IST

தமிழகத்தில் கொரோனா பலி 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தற்போது கொரோனா மருத்துவமனைகளில் 44,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் தற்போது அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது.

தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்கு குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது.நேற்று (அக்.8) 5088 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 9 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 40,943 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

அதே சமயம், தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5718 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 86,454 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 68 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,052 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 44 ஆயிரத்து 424 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று புதிதாக 1295 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 137 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 78,108 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 363 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 194 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 38,487 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 34,154 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.

கோவை மாவட்டத்தில் புதிதாக 448 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 132 பேருக்கும், சேலத்தில் 362 பேருக்கும், திருப்பூரில் 173 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 239 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 129 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 124 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் பலி எண்ணிக்கை தமிழகத்தை விடக் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில்தான் கொரோனா பலி 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாக, சென்னையில் 3351 பேர், செங்கல்பட்டில் 584 பேர், கோவையில் 479 பேர், காஞ்சிபுரத்தில் 341 பேர், திருவள்ளூரில் 573 பேர், சேலத்தில் 365 பேர், கடலூரில் 264 பேர், கன்னியாகுமரியில் 230 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற மாவட்டங்களில் பலி எண்ணிக்கை 200க்கு குறைவாக உள்ளது.

You'r reading தமிழகத்தில் கொரோனா பலி 10 ஆயிரத்தை தாண்டியது.. சிகிச்சையில் 44 ஆயிரம் பேர்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை