காதலனுடன் பைக்கில் சென்ற 17 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் பலாத்காரம்...!

5 arrested for raping 17 year old girl in Jamshedpur

by Nishanth, Oct 10, 2020, 18:42 PM IST

ஜாம்ஷெட்பூரில் காதலனுடன் பைக்கில் சென்ற 17 வயது சிறுமியைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று காதலன் கண்ணெதிரே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கு 17 வயதில் ஒரு மகள் உண்டு. அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இவர் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் அருகில் உள்ள ஒரு நடனப் பள்ளியில் நடனம் பயின்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடனப் பயிற்சிக்குச் சென்ற இவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இதையடுத்து பயந்த அந்த மாணவியின் பெற்றோர் ஜாம்ஷெட்பூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அந்த மாணவியைத் தேடி வந்தனர்.
இதில் அப்பகுதியில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள காலியதிஹா என்ற இடத்தில் வைத்து மாணவியை போலீசார் மீட்டனர். அவரிடம் விசாரித்ததில் நடனப் பயிற்சி சென்று திரும்பி வரும்போது 5 பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாகக் கூறினார். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் அந்த மாணவி கூறியது பொய் எனத் தெரிய வந்தது. அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். வீட்டில் நடன பள்ளிக்குச் செல்வதாகக் கூறி விட்டு அந்த மாணவி காதலனுடன் பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது தான் 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் மாணவியைக் கடத்திச் சென்றனர். பின்னர் அங்குள்ள ஒரு ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வைத்து காதலனைக் கட்டிப்போட்டு அவரது கண்ணெதிரே மாணவியை 5 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்தனர். மாணவியைப் பலாத்காரம் செய்ததில் ஒரு சிறுவனும் உண்டு. போலீசாரின் தீவிர விசாரணையில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை