கணவன் வீட்டார் மீது நடவடிக்கை இல்லையே ... காவல் நிலையம் முன் இளம்பெண் தர்ணா.

No action on the husbands house. young ladyTarna in front of the police station

by Balaji, Oct 10, 2020, 18:36 PM IST

குடும்பத்தகராறில் பிரிந்து வாழும் பெண் தனது கல்விச்சான்றிதழ், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கித்தருமாறு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து இளம்பெண் ஒருவர் ஆலங்குளம் காவல்நிலையம் முன்பு குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஜோதி நகரைச் சேர்ந்தவர் ராமநாதன் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியரான இவரது மகள் சுபாஷர்மினிதேவி.(27). இவருக்கும் ஆலங்குளம் ரெட்டியார் பட்டியைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியரான சிவசங்கர் (30) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

சுபா ஷர்மினி தேவிக்குத் திருமணத்தின் போது வரதட்சணையாக 100 பவுன் தங்க நகையும் 2 லட்சம் ரூபாய் பணமும் கொடுத்துள்ளனர். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக சுபாஷர்மினதேவி கணவரைப் பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார்.

சுபாஷர்மினிதேவி தன் கணவரும் நாத்தனாரும் சேர்ந்து தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும் தன்னுடைய நகை, பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ் ஆகியவற்றைத் திரும்பப் பெற்றுத் தரவேண்டும் என்று ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் நாட்களுக்கு முன்பு புகார் செய்திருந்தார். புகார் . ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சுபாஷர்மினிதேவி தனது தாய் சகோதரர் மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு ஆலங்குளம் காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு ஆதரவாக பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அங்கு வந்தனர் . தகவல் அறிந்து ஆலங்குளம் துணை கண்காணிப்பாளர் பொன்னி வளவன் அங்கு வந்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். சுப்பிரமணியன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

More Tenkasi News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை