2 வது கணவனை கொலை செய்து கள்ளக்காதலனுடன் உல்லாசம்

தென்காசி அருகே 2 வது கணவனை கொலை செய்து விட்டு கள்ளக்காதலனுடன் 3 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பெண்ணை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

தென்காசி மாவட்டம் குத்துகல்வலசை அருகே அண்ணா நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் அபி என்ற அபிராமி . அழகு நிலையம் வைத்து நடத்தி வரும் இவர், முதல் கணவர் இறந்ததையடுத்து, கடந்த 4 வருடங்களுக்கு முன் 19 வயது இளைஞரான காளிராஜ் என் மெக்கானிக்கை திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன ஒரு வருடம் கழித்து காளிராஜை காணவில்லை.

இதையடுத்து, தனது மகனை கடந்த மூன்று வருடமாக காணவிலை என காளிராஜின் தாய் உமா தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் அபிராமியை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காளிராஜை திருமணம் செய்து கொண்ட நிலையில் அபிக்கும் மாரிமுத்து என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. காளிராஜ் வீட்டில் இல்லாத நேரத்தில் அபியின் வீட்டில் மாரிமுத்து உல்லாசமாக இருந்தநிலையில், ஒருநாள் திடீரென வீட்டிற்கு வந்த காளிராஜிக்கு விஷயம் தெரிந்துள்ளது. அப்போது காளிராஜுக்கும் மாரிமுத்துவுக்கும் ஏற்பட்ட சண்டையில், மாரிமுத்து தாக்கியதில், காளிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர் மாரிமுத்து, நண்பர்கள் இருவர் உதவியுடன் அபியின் வீட்டில் உள்ள தென்னை மரத்திற்கு அடியில் காளிராஜின் சடலத்தை புதைத்துள்ளனர்.

இதையடுத்து , காவலர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டி பார்த்துள்ளனர். அப்போது, காளிராஜின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து அபிராமி, கள்ளகாதலன் மாரிமுத்து மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
tenkasi-district-dmk-official-sent-sexual-videos-to-girl-her-family-attacked-him
சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய திமுக பிரமுகரை பின்னி பெடலெடுத்த உறவினர்கள்
thenkasi-wife-her-paramour-and-2-more-were-arrested-in-youth-murder
2 வது கணவனை கொலை செய்து கள்ளக்காதலனுடன் உல்லாசம்
to-declare-vasudevanallur-as-a-public-constituency-case-sought-adjournment-of-judgment
வாசுதேவநல்லூர் பொது தொகுதியாக அறிவிக்க கோரிய வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு
farmers-struggle-with-sugarcane-in-tenkasi
தென்காசியில் கரும்புடன் வந்து விவசாயிகள் போராட்டம்
tenkasi-pwd-officer-fined-rs-50-000-state-information-commissioner-action
தென்காசி பொதுப்பணித்துறை அதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்: மாநில தகவல் ஆணையர் நடவடிக்கை
allow-to-bathe-in-courtallam-falls-sarathkumar-s-request
குற்றால அருவியில் குளிக்க விடுங்க.. சரத்குமார் வேண்டுகோள்
did-mla-poongothai-attempt-suicide
தற்கொலைக்கு முயன்றாரா எம்.எல்.ஏ. பூங்கோதை?
floods-in-courtallam-falls-due-to-heavy-rains-in-tenkasi-area
பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..
sale-of-land-owned-by-the-police-department-with-forged-documents-registration-department-employee-suspended
போலி ஆவணங்கள் மூலம் காவல் துறைக்கு சொந்தமான இடம் விற்பனை... பத்திரப்பதிவு ஊழியர் சஸ்பெண்ட்...!
wanted-and-received-for-50-thousand-rupees-parents-trying-to-sell-daughter-in-sankarankovil
50 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு பெற்ற மகளை விற்க முயன்ற பெற்றோர்
Tag Clouds