பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..

by Balaji, Nov 8, 2020, 19:27 PM IST

தென்காசி வட்டாரத்தில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி குற்றாலம் செங்கோட்டை ஆலங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பெருமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக குற்றாலத்தில் இன்னமும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக அருவி கரைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் நேற்று குற்றாலம் கோவிலுக்கு வந்த சிலர் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கைக் கண்டு ரசித்தனர். அருவியில் குளிப்பதற்குதான் அனுமதி அளிக்கப் படவில்லை என்றாலும் அருகில் சென்று பார்க்கவாவது அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

More Tenkasi News


அண்மைய செய்திகள்