4வது கால்நடை ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவரது ஆட்சி காலத்தில் ரூ.900 கோடி கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிக்கினார்.
இவர் மீது 6 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. இந்த வழக்குகள் மீதான விசாரணை ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டு 31 பேரில் 19 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கெனவே, 3 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவித்ததை அடுத்து, 13.5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தும்கா கருவூலத்தில் ரூ.3.5 கோடி முறைகேடு தொடர்பான லாலு மீதான 4வது வழக்கு ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில், லாலு குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. இதற்கான தீர்ப்பு விவரம் இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
அதன்படி, இந்த வழக்கு இன்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமனறத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில், 4வது கால்நடை ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்குகுற்றவியல் சட்டத்தின் கீழ் 7 ஆண்டும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 7 ஆண்டும் என மொத்தம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.