தங்க கடத்தல் வழக்கு : ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.

Gold smuggling case: High Court stays arrest of IAS officer Sivasankara

by Balaji, Oct 15, 2020, 19:20 PM IST

தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக முதல் மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில் அம்மாநில அரசு உயர் அதிகாரிகள் பழற்றுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தேய வந்தது. இந்த வழக்கில் முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் என்பவருகக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய புள்ளியான சுவப்னாவு டன் நெருங்கிய தொடர்பில் இருந்து கொண்டு, அவருக்கு பல்வேறு வகைகளில் தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக சிவசங்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக என்.ஐ.ஏ, சுங்கத்துறை, அமலாக்க இயக்குனரகம் சார்பில் பல கட்ட விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அனைத்து தரப்பு விசாரணையும் ம முடிந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை , கொச்சியிலுள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகத்தில், உடனடியாக ஆஜராக சிவசங்கருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் சிவசங்கர் ஆஜராகவில்லை. இது குறித்து சிவசங்கர் கொச்சி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்ககள் சிலருடன் ஆலோசனை நடத்தினார். . அமலாக்க பிரிவின் அவசர அழைப்பை தொடர்ந்து அங்கு ஆஜரானால் நீங்கள் நிச்சயம் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது என வழக்கறிஞர்கள் தெரிவித்தனராம். இதை தொடர்ந்து அவர்களின் ஆலோசனைப்படி கேரள உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நான் தவறு ஏதும் செய்யவில்லை ஆதலால் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய போவதில்லை என கூறி வந்த அவர், தற்போது முன் ஜாமீன் கேட்டு உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து இருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் , அவரது முன் ஜாமீன் மனு உயர் நீதிமன்ற நீதிபதி அசோக் மேனன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்க இயக்குனரகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் , சிவசங்கரை கைது செய்யும் நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை என்று தெரிவித்தார். சிவசங்கர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.விஜயபானு ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அசோக் மேனன், சிவசங்கரை இம்மாதம் 23-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார். முன் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் அக்டோபர் 23 - ந் தேதி நடக்க உள்ளது.

You'r reading தங்க கடத்தல் வழக்கு : ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்கால தடை. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை