மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி!

Presidential rule in West Bengal

by Loganathan, Oct 18, 2020, 16:24 PM IST

மேற்கு வங்காள முதல்­வர் மம்தா பானர்ஜிக்கும் கவர்னர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே நடைபெற்று வரும் பனிப்போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. ஜெக­தீப்தங்கர் மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்­ பட்டு வருகிறார் என்று திரி­ணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளும் மாநில அமைச்சர்களும் சாடி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்­டது என்று மத்திய அர­சுக்கு ஜெகதீப்தங்கர் அறிக்கை அனுப்பி உள்­ளார். எனவே மம்தா பானர்ஜி அரசு தேர்தல் வரை தொடர்ந்து நீடிக்குமா அல்லது ஓரிரு வாரங்­களில் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்படுமா என்ற கேள்வி விஸ்வரூபம்
எடுத்துள்ளது.

சட்­டம், ஒழுங்கு சீராகா­விட்­டால் மேற்குவங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க தயங்கமாட்டோம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்­ளது. இதனையடுத்து மத்திய அரசு மீதான தாக்குதலை மம்தாபானர்ஜி மேலும் தீவிரப்படுத்தியுள்ளார். அமித்ஷாவின் இந்த பேட்டியை பா.ஜ.க.வினர் வரவேற்றுள்ளனர். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை