போலீஸுக்கு வந்த ரகசிய தகவல்.. மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

5 Naxalites died in maharashtra

by Sasitharan, Oct 18, 2020, 21:10 PM IST

ஒடிசா, பீகார், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஆந்திரா ஆகிய சில மாநிலங்களில் நக்சலைட்கள், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இவர்களை ஒடுக்க அந்தந்த மாநிலங்களில் தனிப்படை அமைக்கப்பட்டு அவ்வப்போது தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மகாராஷ்டிரா மாவடம் கட்சிரோலி மாவட்ட காட்டுப்பகுதியில் இன்று சில நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக போலீஸுக்கு ரகசிய தகவல் கிடைக்கவே, போலீஸ், மத்திய ரிசர்வ் படையினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர், இதில் காட்டு பகுதிக்குள் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் சிறப்புப்படையினர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

உடனே சுதாரித்த சிறப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலின் போது நக்சலைட்டுகள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட அவர்களிடமிருந்து பல விதமான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒடிசா, பீகார், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளன.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More India News

அதிகம் படித்தவை