`அமித்ஷாவுக்கு என்ன தெரியும்?- ட்விட்டரில் ஓர் அணியான இரு மாநில முதல்வர்கள்

by Rahini A, Mar 25, 2018, 18:50 PM IST

`அமித்ஷாவுக்கு வரி விதிப்பைப் பற்றி ஒன்றும் தெரியாது’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா ட்வீட் செய்துள்ளார்.

`இதுவரை ஆந்திராவுக்கு கொடுப்பதாக சொன்ன எந்த நிதியையும் பா.ஜ.க அரசு தரவில்லை. எனவே அவர்களுடனான கூட்டணியை முறித்துக் கொள்கிறோம்’ என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு சில நாள்களுக்கு முன்னர் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

இதையடுத்து அமித்ஷா, சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ` வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் அரசியல் காய் நகர்த்தல்களில் கவனம் செலுத்தியே தெலுங்கு தேசம் பா.ஜ.க-வுடன் கூட்டணியை முறித்துள்ளது’ என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சந்திரபாபு, `இந்திய அளவில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்று ஆந்திரா. ஆனால், இங்கு வளர்ச்சி இல்லை என்கிறீர்கள். எங்களுக்கு கொடுத்ததை விட அதிக நிதி ஒதுக்கப்பட்டதாக பிதற்றுகிறீர்கள்.

ஏன் இப்படி பொய் உரைக்கிறீர்கள்?’ என்று கொதித்தார். இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் இந்த ட்வீட்டை டேக் செய்து கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா, `அமித்ஷாவுக்கு வரி விதிப்பைப் பற்றியும் வரி பகிர்தலைப் பற்றியும் என்ன தெரியும்?

கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை விட அவர் அதிகமாக ஒதுக்கப்படுவதாக பொய் சொல்கிறார். மாநிலங்களுக்கு கொடுக்கும் நிதி, அவர்களது உரிமை என்பதை மறந்து இலவசம் என்று நினைக்கிறார் அமித்ஷா’ என்று வறுத்தெடுத்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading `அமித்ஷாவுக்கு என்ன தெரியும்?- ட்விட்டரில் ஓர் அணியான இரு மாநில முதல்வர்கள் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை