தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியுள்ளனர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அந்த அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் உத்தரவிட்டதற்கிணங்க, அவர்கள் வகித்த வந்த பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு உள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.
இதுவரை இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலை வகிக்கிறது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடந்து வருகிறது. மூன்றாவது நாள் ஆட்டமான இன்றை மதிய உணவு இடைவெளியின் போது சில அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வீடியோ காட்சிகளில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் உள்ளிட்டோர் பந்தை சேதப்படுத்தும் காட்சிகள் இருந்தன. பந்தை அதிக சிவிங் செய்ய முடியும் என்பதால் அப்படி அவர்கள் செய்ததாக தெரிகிறது. இருப்பினும், இது ஐசிசி-யின் விதிகளுக்கு புறம்பானது.
எனவே, ஊடகங்களில் இந்த விஷயம் பூதாகரமானது. இந்த சம்பவம் தெரியவந்த சில மணி நேரத்திலேயே ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் மால்கம் டர்ன்புல், `ஆஸ்திரேலிய அணி வீரர்களின் செயல் எனக்கும் நாட்டு மக்களுக்கும் அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் விசாரித்து உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.
மேலும், அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் இருவரும் அவர்கள் வகித்து வரும் பதவியிலிருந்து நீக்ப்ப ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்’ என்றார். பிரதமரின் உத்தரவு போட்ட சில மணி துளிகளில் இருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.