“என் மனசாட்சி இடம்தரவில்லை”- விருதை வாங்க மறுத்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா

Mar 26, 2018, 08:52 AM IST

சசிகலாவின் சிறை வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஐபிஎஸ் அதிகாரி ரூபா தன்னார்வ அமைப்பு வழங்கிய விருதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு அக்ரஹாரா சிறைச்சாலையில் சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டன அனுபவித்து வருகிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவர், சிறையில் ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து நவீன வசதிகளை பெற்று வந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இதுகுறித்த ஆதாரங்களை திரட்டி வெளியுலகிற்கு வெளிச்சம்போட்டுக்காட்டினார் ஐபிஎஸ் அதிகாரி ரூபா. இந்தப் பிரச்னை அப்போது, பரபரப்பானது.

இந்த நேர்மையான செயலை பற்றி ரூபாவை பலரும் பாராட்டினர். இந்நிலையில், "நம்ம சென்னை" என்ற பெங்களூரை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒவ்வொரு வருடமும் சிறப்பாக செயல்படும் அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு விருது வழங்கி கௌரவிக்க தொண்டு நிறுவனம் விரும்பியது.

ஆனால், இந்த அமைப்பின் விருதை ஐபிஎஸ் அதிகாரி ரூபா ஏற்க மறுத்துவிட்டார். இதை குறிப்பிட்டு அந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு ரூபா கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், “இந்த விருதை ஏற்க என் மனசாட்சி இடம் தரவில்லை. ஒவ்வொரு அரசு ஊழியர்களும் நடுநிலையான சமநிலையை மட்டுமே அரசியல் அமைப்புகளிலிருந்தும், அறக்கட்ளை அமைப்புகளிடமிருந்தும் எதிர்பார்க்கின்றனர் ” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading “என் மனசாட்சி இடம்தரவில்லை”- விருதை வாங்க மறுத்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை