கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான கருத்து விவகாரம்: இளையராஜா வீடு முற்றுகை

Mar 26, 2018, 09:24 AM IST

கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் நேற்று இசைஞானி இளையராஜா வீட்டை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிறிஸ்தவர்களின் அடித்தளமான மத நம்பிக்கையான உயிர்த்தெழுதல் குறித்தும், அது நடக்கவில்லை என்றும் கிறிஸ்தவ மதத்தை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்ததாக சிறுபான்மை மக்கள் நலக்கட்சியினர் இளையராஜாவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டை முற்றுகையிடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால், இளையராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், அவர்கள் அறிவித்தபடியே சிறுபான்மை நலக் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இளையராஜா வீட்டை நோக்கி நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட முயன்றனர்.

இதனால், அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பின்னர் கைது செய்தனர். இவர்களை, தி.நகரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான கருத்து விவகாரம்: இளையராஜா வீடு முற்றுகை Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை