விசா கட்டுப்பாடுகளை தளர்த்தியது மத்திய அரசு

Visa restrictions The federal government relaxed

by Balaji, Oct 22, 2020, 18:11 PM IST

கொரோனா பொது ஊரடங்கிற்குப் பின்னர், விசா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. மின்னணு, சுற்றுலா, மற்றும் மருத்துவ விசாக்கள் தவிர்த்து அனைத்து விசாக்கள் மூலம் வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் வந்து செல்ல அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியவுடன் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச விமானப் போக்குவரத்தை நிறுத்தியது.அத்துடன் வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசா வழங்கவும், வழங்கிய விசாக்களையும் ரத்து செய்தது.

இதனால் கடந்த 8 மாதங்களாக வர்த்தக ரீதியில் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இருப்பினும் வந்தே பாரத் மிஷன் மூலம் முக்கிய நாடுகளுக்கு அவ்வப்போது விமானப் போக்குவரத்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வைரஸ் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து விசா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளைத் தளர்வை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில் , வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் இந்தியர்கள், பிஐஓ கார்டு வைத்திருப்போர், வெளிநாட்டினர் அனைவரும் இனி எந்த காரணத்திற்காகவும் இந்தியாவுக்குள் வரலாம். அதே சமயம் , சுற்றுலா விசாக்கள் மூலம் மட்டும் வருவதற்கு அனுமதியில்லை.கொரானா வைரஸ் பரவல் குறையத் தொடங்கியதையடுத்து, விசாக் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி வெளிநாட்டினர், இந்தியர்கள் இந்தியாவுக்குள் வரவோ அல்லது செல்லவோ விதிக்கப்பதிருந்த கட்டுப்பாடுகள் இனி நீக்கப்படுகின்றன.

அதே சமயம் மின்னணு விசா, மருத்துவ விசா, சுற்றுலா விசாக்களில் மட்டும் வெளிநாட்டினர், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்குள் வர அனுமதியில்லை. மற்றவர்களில் அனைத்து விசாக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்படுகிறது.விசாக்களின் தேதி காலாவதியாக நேரும் பட்சத்தில் அந்த நபர்கள் இந்தியத் தூதரகத்தின் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம். மருத்துவச் சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டினர் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் தங்களுடன் வருவோருக்கும் சேர்த்து விசாவிற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

ஓசிஐ மற்றும் பிஐஓ அட்டை வைத்திருப்பவர்கள், வெளிநாட்டினர் இந்தியாவுக்குச் சுற்றுலா விசா தவிர எந்த வேலைக்கு வேண்டுமானாலும் விமானம், கப்பல் மார்க்கமாக இந்தியா வந்து செல்லலாம். வந்தே பாரத் மிஷன் திட்டம் மூலம் பயணிகள் இந்தியாவுக்குள் வந்து செல்லலாம். ஆனால், அதில் பயணம் மேற்கொள்ளும் போது கடுமையான விதிமுறைகள், வைரஸ் தடுப்பு பாதுகாப்பு வழிமுறைளைப் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.இந்த தளர்வு உத்தரவு மூலம் வெளிநாட்டினர் இனிமேல் இந்தியாவுக்கு வர்த்தகம், தொழில், மாநாடு, அலுவல் பயணம், படிப்பு, வேலைவாய்ப்பு, ஆய்வுப் பணிகள், மருத்துவக் காரணங்களுக்காக வந்து செல்லலாம்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை