பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட நமோ செயலியிலிருந்து தனி நபர் தகவல்கள் திருடப்படுவதாக தகவல் கசிந்துள்ளது.
இதையடுத்து, ராகுல் காந்தி பிரதமர் மீது கடும் விமர்சனங்களைத் தொடுத்துள்ளார். சில நாள்களுக்கு முன்னர் ஒரு தகவல் கசிந்தது. பிரதமர் மோடி வெளியிட்டு தனது சொந்த பயன்பாட்டு செயலியான `நமோ ஆப்’-லிருந்து தனி நபர் தகவல்கள் திருடப்படுவதாக கூறப்பட்டது.
இது இந்திய அளவில் பெரும் விவாதப் பொருளான நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவர் பங்குக்கு விமர்சனங்களை அள்ளித் தெளித்துள்ளார். தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து ராகுல், `நமோ ஆப் மூலம், பிரதமர் நரேந்திர மோடி பல கோடி இந்திய மக்கள் பற்றிய தனி நபர் தகவல்களை திருட முயல்கிறார்.
இந்த செயலியை மத்திய அரசு விளம்பரப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இந்தத் தரவுகள் மோடிக்குச் சொந்தமானதல்ல. அது இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் மட்டுமே சொந்தமானது’ என்று கடுகடுத்துள்ளார்.