பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் சமீபகாலமாக வெளிப்படையாகவே அதிகரித்துக் காணப்படுகிறது.
பெரும் இயற்கைச் சீற்றங்களான வெள்ளம், புயல், நிலச்சரிவு எனப் பல அபாயங்களையும் கண்கூடாகவே பார்த்தும் அனுபவித்தும் வருகிறோம். காலப்போக்கில் இதனால் நமது இயற்கை சூழலே பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே இதன் விளைவுகள் உலகெங்கிலும் தண்ணீர் பஞ்சம், பல்லுயிர் சிதைவு, விளைச்சலில் வீழ்ச்சி, பல்கிப்பெருகும் நோய்கள் என எதிரொலித்து வருகிறது. பருவநிலை மாற்றத்தால் காடு, நிலைம், நீர் என இயற்கையை மட்டுமே நம்பி வாழும் மக்கள் இனத்தை வெகுவாகவே பாதிக்கிறது.
பெண்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை கையிலெடுத்து கையாளத்தொடங்கினால் மட்டுமே பருவநிலை மாற்றங்களால் வரும் இன்னல்களுக்கு உள்ள ஒரே நிரந்தரத் தீர்வாகும். விறகுகள், கரி, விவசாயக் கழிவுகள் எனப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் மூலமே வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்.
காடுகளை அழிவிலிருந்து காப்பறுவதும் பெண்களின் கையில்தான் உள்ளது. எரிபொருள் தேவைகளுக்காக முழுவதும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மட்டும் பயன்படுத்தும் சூழலைப் பெண்களால் மட்டுமே கொண்டுவர முடியும். 1970-ம் ஆண்டு இந்தியாவில் காடுகளில் அழிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிப்கோ இயக்கம் உருவானது. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள பெண்களாலே இந்த இயக்கம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இந்த இயக்கப் போராட்டத்துக்கான ஆதரவு இப்பெண்களாலே சாத்தியமாகியது.
இப்பெண்களாலே இந்தியாவில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு சட்டமே உருவானது. இதுபோலவே கென்யாவிலும் வங்காரி மாத்தாய் என்ற ஒரு பெந்தான் பசுமை வளாக இயக்கத்தைத் தோற்றுவித்து 1977-ம் ஆண்டு முதல் மரம் நடுதலில் ஈடுபட்டு காடுகளைக் காப்பதில் தீவிரமாக உழைத்தவர். இதுபோல் இயற்கையைப் பாதுகாக்கப் பெண்களால் தொடங்கப்பட்ட இயக்கங்கள் பல உள்ளன.
அப்படிப்பட்ட பெண்களால் உருவான சிப்கோ இயக்கத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக கூகுள் டூடுள் உருவாக்கி அப்பெண்களை சிறப்பித்துள்ளது.