இத்தாலியில் திருமணம் செய்த கோலிக்கு தேசப்பற்று இல்லை என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் பன்னலால் ஷாக்யா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம், குணா தொகுதி பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் பன்னலால் ஷாக்யா (62) கல்லூரி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், 'சமீபத்தில் என்னிடம் ஒரு பத்திரிகையாளர், மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் இப்போது உயர்ந்துவிட்டன என்று கேட்டார்.
அதற்கு நான் அவரிடம், ‘ஏன் பெண்களுக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்? பெண்களுக்கு ஆண் நண்பர்கள் இல்லை என்றால், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் இருக்காது. ஆண்களுக்கும் பெண் நண்பர்கள் இருக்கக் கூடாது` என்று கூறியதாக ஷாக்யா பேசினார்.
மேலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் தழுவாமலிருக்க பெண் நண்பர்களையே பெண் நண்பர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆண் நண்பர்கள் குறித்தான கருத்து பலரும் எதிர்ப்பும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
தவிர விராட் கோலி இத்தாலியில் திருமண ஏற்பாடுகள் செய்தது குறித்த விமர்சித்து பேசிய பன்னலால். “ராமரும், கிருஷ்ணரும் தத்தமது சொந்த மண்ணிலேயே திருமணம் செய்து கொண்டனர். அவர்களில் யாரும் திருமணம் செய்வதற்காக வெளிநாடுகளுக்கு செல்லவில்லை.
அவர் இங்கே தான் பணத்தை சம்பாதிக்கிறார். லட்சக்கணக்கில் செலவளிக்கிறார். அவருக்கு நாட்டின் எந்த மரியாதையும் இல்லை. இதிலிருந்து அவருக்கு தேசப்பற்று இல்லை என்பது தெரிகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.