என்னைக் கொல்வதற்காக மந்திரன்களை பயன்படுத்தி தந்திரீக சடங்குகளை லாலு பிரசாத் யாதவ் செய்திருக்கிறார் என்று பீகார் துணை முதல்வரும் பாஜக தலைவருமான சுஷில் மோடி குற்றம் சாட்டியிருக்கிறார். தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இந்தப் புகார் காட்டுமிராண்டித் தனமான ஒன்று என்று லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி மறுத்துள்ளார். ஒரு மாநிலத்தின் துணை முதல்வராக இருப்பவர் மாநிலத்தின் வேலை வாய்ப்பு பற்றி பேசலாம், தொழில் ,கல்வி நிலைமை பற்றியும் பேசலாம், கொ ரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழலில் சுகாதார நடவடிக்கைகள் பற்றி பேசலாம், ஆனால் மாநிலத்தின் துணை முதல்வரான சுசில் என்னைக் கொல்ல லாலு பிரசாத் யாதவ் தாந்திரீக சடங்குகள் செய்தார் என்று சொல்லியிருக்கிறார். இது காட்டுமிரண்டித்தனமாக உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் தங்கள் ஆட்சியும் காட்டியும் சாதித்தது என்ன என்பது குறித்து அவர் பேசியிருந்தால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், மூடநம்பிக்கைகள் அடிப்படையில் இப்படி புகார் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று தேஜஸ்வி பதிலளித்துள்ளார்.