ராகுல்காந்தி இந்தியாவின் பிரதிநிதியா அல்லது பாகிஸ்தானின் பிரதிநிதியா ? என்று தெரியவில்லை அந்தக் அளவிற்கு அவரது பேச்சு இருக்கிறது என பா. ஜ. க. தலைவர் ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பினார்.ராஜஸ்தான் மாநிலத்தில் பல மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்களைக் கட்ட பாஜக தலைவர் நட்டா காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டிவருகிறார். அப்போதாவது ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370 என்ற அரசியல் சட்ட விதியை பாஜக அரசு ரத்து செய்தது.
இதன்மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு இருந்த தனிக் கொடி, தனிச் சட்டம் எல்லாம் ரத்து செய்யப்பட்டு விட்டது.இதன் பின்னர் தற்போது ஜம்மு-காஷ்மீர் இந்திய அரசியல் சட்டத்தின் கீழ், இந்தியத் தேசியக் கொடியின் கீழ், இந்தியச் சட்டத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு மாநிலமாகும் . ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாகப் புகார் கூறுகிறார். ராகுல் காந்தி எடுத்துக்கொடுத்த இந்த புகாரைக் கையில் வைத்துக்கொண்டு தான் பாகிஸ்தான் பிரதமர் ஐ. நா.சபையில் பேசுகிறார். இதன் மூலம் நமக்கு எழும் சந்தேகம் என்னவெனில் ராகுல்காந்தி இந்தியாவின் பிரதிநிதியா அல்லது பாகிஸ்தானின் பிரதிநிதியா என்பது தான்.
இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த நேரு கூட அரசியல் சட்ட விதி 370 ஒரு தற்காலிக விதி தான் என்று தெரிவித்திருந்தார். லாகூரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் இந்தியாவைக் கண்டித்தும் பாகிஸ்தானைப் பாராட்டியும் பேசியிருக்கிறார். இதே போலத்தான் ராகுல் காந்தியும் பாகிஸ்தானைப் பாராட்டிப் பேசுகிறார். இது ஏன்? எதற்கு? என ஒன்றும் புரியவில்லை இந்தியாவைப் பாதுகாக்கப் பிரதமர் மோடி பாடுபடுகிறார். காங்கிரஸ் இந்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து வருகிறது என்று நட்டா கூறினார்.