தனிநபர்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லை : பெங்களூர் ஏடிஜிபி ராஜினாமா

ஒரு சில நபர்கள் தன்னை மறைமுகமாகத் துன்புறுத்தியதாகக் கூறி பெங்களூரில் ஏடிஜிபி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.

by Balaji, Oct 30, 2020, 11:42 AM IST

பெங்களூருவில் வனத்துறை கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றி வருபவர் டாக்டர் பி.ரவீந்திரநாத். கடந்த 28 ம் தேதி இவர் டி.ஜி.பி. பிரவீன் சமூலம் தலைமைச் செயலாளர் டி எம் விஜய் பாஸ்கருக்கு தந்து ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அண்மையில் கர்நாடக மாநிலத்தில், அமர் குமார் பாண்டே மற்றும் டி சுனீல்குமார் இரண்டு உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றனர்.பதவி உயர்வுக்குத் தகுதி இருந்தும் ரவீந்திரநாத்திற்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.அவர் தனது ராஜினாமா கடிதத்தில் , நான் கர்நாடக மக்களுக்கு மிகுந்த பக்தியுடன் சேவை செய்துள்ளேன். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு சில நபர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியதாயிற்று.

அதனால் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தையும் உயர் நீதிமன்றத்தையும் அணுகி நிவாரணம் பெற்றேன்.உச்சநீதிமன்றமும் தனது சேவை விஷயத்தில் அவருக்கு நீதி வழங்கியது ஆனால் ஒரு சில நபர்கள் நீதி கிடைத்து விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தனர் எனக்கு மறைமுக துன்புறுத்தலை அளித்தனர். அந்த வேதனையை அனுபவித்த நான், அமைதியான வாழ்க்கையை நடத்துவதற்காக எனது வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று அவர். குறிப்பிட்டுள்ளார்.அவர் தனது ராஜினாமாவை ஏற்குமாறு தலைமைச் செயலாளரிடம் கேட்டார்.ஆந்திராவைச் சேர்ந்த இந்த ஐபிஎஸ் அதிகாரி ஆறு ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் ஒரு பெண்ணை போட்டோ எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சர்ச்சையில் சிக்கி இருந்தவர்.

You'r reading தனிநபர்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லை : பெங்களூர் ஏடிஜிபி ராஜினாமா Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை