இன்று இரவு வானில் நீல நிலவு...

வானில் தோன்றும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான ப்ளூ மூன் இன்று தோன்றுகிறது

by Balaji, Oct 31, 2020, 10:27 AM IST

ஹாலோவீன் (Halloween) என்பது மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி. இது சாத்தான்களை விரட்டும் நாள் என்றும், வெயில் காலம் முடிந்து குளிர் காலத்தின் துவக்கமாகவும் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட நம்மூர் தீபாவளி மாதிரி சொந்தங்கள் ஒன்று கூடி வெவ்வேறு முறைகளில் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் இது அவ்வளவாக இல்லை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக இங்கும் சிலர் இந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.இந்த நாளில் காணப்படும் நிலவு நீல நிலவு என அழைக்கப்பட்டாலும், உண்மையில் நிலவு நீலமாகக் காணப்படுவதில்லை.

இயற்கை பேரழிவுகளால் வளிமண்டலத்தில் வீசப்படும் துகள்கள் காரணமாக நிலவு மிகவும் அரிதாகவே நீல நிறமாகத் தெரிகிறது என்று நாசா கூறுகிறது.ப்ளூ மூன் ஒவ்வொரு 19 வருடங்களுக்கும் ஏழு முறை தோன்றுகிறது. இந்தியாவில்இன்று இரவு சுமார் 8:19 மணிக்கு ப்ளூ மூனைக் காணலாம் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புளூ மூன்' (நீல நிலவு) ' நிகழ்வு இன்று ஏற்படுகிறது. ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமியில் இரண்டாவதாக வரும் பவுர்ணமியே புளூ மூன் ஆகும்.

புளூ மூன் நிலவின் நிறத்தில் எந்த மாறுபாடும் இருக்காது. இயற்கை பேரழிவுகளால் வளிமண்டலத்தில் வீசப்படும் துகள்கள் காரணமாக நிலவு மிகவும் அரிதாகவே நீல நிறமாகத் தெரியும் என்று நாசா ஆய்வு மையம் கூறுகிறது.மேலும் முழுக்க முழுக்க பவுர்ணமியின் கால நேரத்தைப் பொறுத்தது இது என்றும் நாசா தெளிவுபடுத்தி இருக்கிறது.இந்த புளூ மூன் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் தெரியும்.நாசாவின் கணக்குப்படி கடைசியாக ஹாலோவீனில் ப்ளூ மூன் 1944 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. நாசாவின் கணக்கின்படி படி அடுத்த ஹாலோவீன் ப்ளூ மூன் 2039 இல் நிகழும்!

இதைப் புகைப்படம் எடுப்பது அவ்வளவு லேசான காரியம் இல்லை என்கிறார் வானியல் நிபுணர்கள் . புளூ மூனை ஸ்மார்ட் போனில் புகைப்படம் எடுத்தால் ஏமாற்றமே ஏற்படும். டெலிபோட்டோ உதவியுடன் எடுத்தால் நிலவை ஓரளவு பெரிதாகக் காட்டும் என்கிறார் அவர். இன்று வரும் புளூ மூனை அடுத்து வரும் 2023 ஆகஸ்ட் 31-ம் தேதியும், 2026 மே 31-ம் தேதியும், 2028 டிசம்பர் 31-ம் தேதியும் மீண்டும் தோன்ற உள்ளது .

You'r reading இன்று இரவு வானில் நீல நிலவு... Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை