8 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் ஹீரோ.. இடைவெளிவிட்டு நடிக்கும் ஹீரோயின்கள்..

by Chandru, Oct 31, 2020, 10:16 AM IST

கடந்த 2003ம் ஆண்டு ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். அதன் பிறகு ஆயுத எழுத்து படத்தில் நடித்தார். அத்துடன் தெலுங்கு, இந்தி என வேற்று மொழிப் படங்களில் நடிக்கச் சென்று மீண்டும் 2011ம் ஆண்டுதான் தமிழில் நூற்றெண்பது படத்தில் நடிக்க வந்தார். பின்னர் தமிழ். தெலுங்கு என்று மாறி நடித்து வந்தார். இதற்கிடையில் நடிகைகள் ஸ்ருதிஹாசனுடன் டேட்டிங்கில் ஈடுபட்டார் சித்தார்த் அவருடன் பிரேக் அப் ஆனபிறகு சமந்தாவுடன் டேட்டிங் செய்தார். வருடக் கணக்கில் இருவரும் டேட்டிங் செய்த நிலையில் இருவரும் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சமந்தா பிரேக் அப் செய்து கொண்டு அவரை விட்டு விலகினார். அதன்பிறகு சித்தார்த் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார்.

கடந்த 2102ம் ஆண்டு லவ் பெயிலியர் தெலுங்கு படத்தில் நடித்தவர் அத்துடன் தெலுங்கில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு மீண்டும் தமிழ். இந்தி படங்களில் நடித்தார். இந்தியில் அவரால் சோலோ ஹீரோவாக தனி இடத்தை பிடிக்க முடியாததால் தமிழில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தினார். ஜிகர்தண்டா, அரண்மனை 2. சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்கள் வரவேற்பைப் பெற்றன.தற்போது 8 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.இது குறித்து சித்தார்த் கூறும் போது,8 வருடத்துக்குப் பிறகு தெலுங்கு படத்தில் மீண்டும் நடிக்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படத்தில் சர்வானந்தும் நடிக்கிறார். ஹீரோயின்களாக சாய் பல்லவி நடிக்கப் பேச்சு நடக்கிறது ஏற்கனவே அனு இமானுவேல் இதில் மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார்.சாய் பல்லவி தமிழில் 2018ம் ஆண்டு தியா என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார் அப்படம் வரவேற்பைப் பெறவில்லை. அதன்பிறகு தனுஷ் ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்தார். அதில் அவர் தனுஷுடன் ஆடிய ரவுடி பேபி உலக அளவில் ஹிட்டானது. பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் என் ஜி கே படத்தில் நடித்தார்.

இப்படம் சாய் பல்லவிக்குப் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. மீண்டும் அவருக்குத் தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை ஏற்காமல் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் நடிக்க இடைவெளி விட்டிருக்கிறார்.சித்தார்த்துடன் தெலுங்கு படத்தில் நடிக்கும் அனு இமானுவேலும் தமிழில் துப்பறிவாளன் படத்தில் விஷாலுடன் நடித்தவர் 2 வருட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்தார். அடுத்து தமிழ்ப் படம் எதுவும் அவர் கைவசம் இல்லை.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை