கேன்சர் பாதித்த நடிகர் ஹேர் ஸ்டைல் மாற்றி கெத்து.. புதுதெம்புடன் வருகிறார்..

by Chandru, Oct 31, 2020, 09:57 AM IST

கேன்சர் எனப்படும் புற்று நோய் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். கேன்சர் பாதிப்புக்கு திரையுலகில் பல நடிகர், நடிகைகள் உள்ளாகி இருக்கின்றனர். இந்தி நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் கான், மனிஷா கொய்ராலா எனப் பலர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் எல்லோருமே அமெரிக்கா சென்று மருத்துவமனையில் வருடக் கணக்கில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பினர். இவர்களில் ரிஷிகபூர். இர்பான் கான் சில மாதங்களுக்கு முன் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர்.

நடிகை மனீஷா கொய்ராலா நடிப்பிலிருந்து விலகி ஆன்மிகத்திலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதுமாக தன்னை பிஸியாக வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக சிகிச்சையும் பெற்று வருகிறார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இரண்டு மாதங்களுக்கு முன் மூச்சுத் திணறல் காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா சிகிச்சை எடுக்கப்பட்டது.

ஆனால் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிந்தது இதையடுத்து மூச்சுத் திணறலுக்குத் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமாகி வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்த பிறகு மறுநாள் அவருக்கு மருத்துவமனையிலிருந்து ஷாக்கான தகவல் வந்தது.சஞ்சய் தத்துக்கு கேன்சர் டெஸ்ட் எடுத்ததில் நுரையீரலில் கேன்சர் பாதிப்பு உள்ளது அதுவும் முற்றிய நிலையில் உள்ளது எனது தெரியவந்தது. உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சஞ்சய் தத் கேன்சர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டார். அதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் அந்த திட்டத்தை கைவிட்டு மும்பை மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற முடிவு செய்தார். பிறகு 2 மாதத்துக்கு முன் மும்பை மருத்துவமனையில் சேர்ந்தார். சில காலம் நடிக்காமல் ஒதுங்கி இருக்கப் போவதாகவும் தெரிவித்தார். சென்ற மாதம் சிகிச்சைக்குப் பிறகு அவரது புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் உடல் மெலிந்து மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். அதைக்கண்டு ரசிகர்கள் அவருக்காக வருத்தம் அடைந்தனர். விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக அவருக்கு மெஜேச் பகிர்ந்தனர்.

சஞ்சய் தத் தனது நோய் பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க முடிவு செய்தார். அது அவருக்கு புதிய உற்சாகத்தைத் தந்திருக்கிறது. தற்போது தனது ஹேர் ஸ்டைலை ஸ்பைக் பாணிக்கு மாற்றி அந்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் உற்சாகமாக இருப்பது தெரியவதை கண்ட ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். நோயிலிருந்து அவர் பெரும் அளவு குணம் அடைந்திருக்கிறார். சஞ்சய் தத்தின் நெருங்கிய நண்பர், ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹக்ம் அலியும் சஞ்சய் தத்தின் புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறார். ஸ்பைக் பாணி ஹேர்கட் செய்து பிளாட்டினம் நிற டெய் அணிந்து. ஸ்டைலான தாடியுடன் அசத்தல் தோற்றத்தில் சஞ்சய் தத் காணப்படுகிறார். தற்போது சஞ்சய் தத் தமிழ். கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகும் கே ஜி எப் 2 படத்தில் நடித்து வருகிறார். இதில் யஷ் கதாநாயகனாக நடிக்க சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை