விஷால், ஆர்யா நடிகைக்கு மீண்டும் நடிக்கும் எண்ணமில்லை.. கறார் முடிவை அறிவித்தார்..

by Chandru, Oct 31, 2020, 09:44 AM IST

கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தவர் சமீரா ரெட்டி அதன்பிறகு வேட்டை, வெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவருக்குப் பட வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து அவர் மும்பை சென்று இந்தி படங்களில் கவனம் செலுத்தினார். அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. இதையடுத்து திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் மூழ்கினார். இரண்டு குழந்தைகளுக்கு தற்போது தாய் ஆகி இருக்கிறார். சமீராவுக்கு 2அது குழந்தை சில மாதங்களுக்கு முன்பு தான் பிறந்தது. அதனை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

விஷால், ஆர்யா இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். ஏற்கனவே பாலா இயக்கத்தில் இவர்கள் அவன் இவன் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் இணைந்திருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இப்படத்தின் மூலம் சமீரா ரெட்டி ரீஎன்ட்ரி ஆகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை சமீரா மறுத்திருக்கிறார். அவர் கூறும்போது இரண்டு குழந்தைக்குத் தாய் ஆக இருக்கிறேன். என் குழந்தையை வளர்க்க வேண்டிப் பொறுப்பு அதிகம் இருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் நடிக்கும் எண்ணமில்லை. அதில் ஆர்வமும் இல்லை என்று கறாராகக் கூறியிருக்கிறார்.இதற்கிடையில் விஷால் சக்ரா என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அத்துடன் துப்பறிவாளன் 2ம் பாகத்திலும் நடிக்கிறார். இப்படத்தை இயக்கும் பொறுப்பும் விஷாலே ஏற்கிறார். முன்னதாக துப்பறிவாளன்2 படத்தை மிஷ்கின் இயக்கி வந்தார். பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின் விஷாலுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது இதையடுத்து அப்படத்திலிருந்து மிஷ்கின் விலகினார். இதனால் இயக்குனர் பொறுப்பையும் விஷால் ஏற்றிருக்கிறார்.

நடிகர் ஆர்யாவும் கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக உடலை கட்டுமஸ்தாக மாற்றி இருந்தார். கொரோனா ஊரடங்கால் அதன் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்நிலையில் தான் மீண்டும் விஷாலுடன் இணைந்து நடிக்கும் படம் வந்தது உடனே ஒப்புக்கொண்டார் ஆர்யா.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை