பங்கு சந்தை இன்று ஆரம்பத்தில் இருந்தே முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) நிறுவனத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு 6.8 சதவீதத்திற்கு மேல் ரிலையன்ஸ் பங்குகள் சரிந்தது.
6.8 சதவீதத்திற்கு மேல் பங்குகள் சரிந்ததை அடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவராக இருக்கும் முகேஷ் அம்பானி தனது நிகர சொத்து மதிப்பிலிருந்து 5 பில்லியன் டாலர்களை ஒரே நாளில் இழந்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த விலையை எட்டியதால், இரண்டாவது காலாண்டில் 15% சரிவையும், நிகர லாபத்தில் 9,567 கோடியையும் இழந்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சரிவால், அம்பானியின் நிகர சொத்து மதிப்பு இப்போது 73 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து அவரின் மிக மோசமான நாளாக இது அமைந்துள்ளது.