பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம்: ரயில்வேக்கு 1,200 கோடி ரூபாய் நஷ்டம்

பஞ்சாபில் விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் ரயில்வே துறைக்கு 1700 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

by Balaji, Nov 5, 2020, 14:10 PM IST

மோடி அரசு மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் அம்மாநிலத்தில் 32 இடங்களில் ரயில் தண்டவாளங்களின் மீது அமர்ந்து போராட்டம் செய்தனர். இதனால் அம் மாநிலம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன .மேலும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தண்டவாளத்தைப் பெயர்த்தும் சேதப்படுத்தியும் உள்ளனர்.

இதன் மூலம் சுமார் 1,200 கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் காரணமாக இவ்வழித்தடத்தில் இயக்க முடியாமல் போய்விட்டது.. மேலும் 1,350 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டும் சில மாற்று வழியில் இயக்கப்பட்டதாலும் சுமார் 1,200 கோடி ரூபாய் வரையிலான நஷ்டம் வரும் என இந்திய ரயில்வே துறை கணித்துள்ளது.

ஜாண்டியலா, நாபா, தல்வாடி சாபு, பத்திந்தா ஆகிய பகுதிகளில் தான் அதிகளவிலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்களின் பாதுகாப்பு கருத்து இந்த மார்க்கத்தில் அனைத்து விதமான ரயில் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நடக்கும் காரணமாக விவசாயம், தொழிற்துறை, மற்றும் கட்டுமான துறை சார்ந்த பொருட்களின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், பஞ்சாம் மாநில முதல்வர் அமிரிந்தர் சிங்கிற்கு ரயில் பாதைக்கு எவ்விதமான சேதமும் ஏற்படாமல் இருக்க உத்தரவாதமும், ரயில் சேவையைத் தொடர ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடந்த செப்டம்பர் 24ம் தேதி முதல் புதிய விவசாயத் துறை மசோதாக்களைத் திரும்பப் பெறக் கோரி பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

You'r reading பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம்: ரயில்வேக்கு 1,200 கோடி ரூபாய் நஷ்டம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை