ஐ.நா ஆலோசனைக் குழுவில் இடம்பிடித்த இந்திய பெண் ஐஎப்எஸ் அதிகாரி!

ifs officer vidisha maitra elected to UNs ACABQ

by Sasitharan, Nov 7, 2020, 22:01 PM IST

ஐக்கிய நாடுகள் சபை எனப்படும் ஐநா சபையின் நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு இந்திய வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஐஎப்எஸ் அதிகாரி விதிஷா மைத்ரா அதிக வாக்குகள் பெற்று உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த குழுவுக்கு உறுப்பினரை தேர்ந்தெடுக்க, ஐ.நா சபையின் 193 உறுப்பினர்கள் இணைந்து தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வானது வாக்குகள் மூலம் என்றாலும், வாக்குகள் தகுதி, அனுபவம் உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு மற்ற நாடுகள் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள்.

அந்த வகையில், ஆசிய- பசிபிக் நாடுகள் சார்பாக இரண்டு பேர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், விதிஷா மைத்ரா அதிக வாக்குகளை பெற்று தேர்வாகியுள்ளார். விதிஷா மைத்ராவுக்கு 126 வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதனால் அடுத்த 3 ஆண்டுகள் அவர் இந்தப் பதவியில் இருப்பார்.இதற்கிடையே, ஜனவரி 1ம் தேதி அவர் பொறுப்பேற்கவுள்ளார். ஐநா நிரந்தர உறுப்பினராக இந்தியா முயற்சித்து வரும் வேளையில் இதுபோன்ற வெற்றி சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியா முக்கியவத்துவம் வாய்ந்த நாடாக மாறி வருவதை காட்டுகிறது என்று ஐ.நாவுக்கான இந்திய நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி கூறியுள்ளார்.

You'r reading ஐ.நா ஆலோசனைக் குழுவில் இடம்பிடித்த இந்திய பெண் ஐஎப்எஸ் அதிகாரி! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை