இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் 2018-19-ம் ஆண்டுக்காண இருசக்கர வாகனம் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை, கடுமையாக உயர்த்தி கடந்த புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்த விவரம் இதோ:
350 சி.சி. வரை உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.985 ஆகவும். (11 சதவீதம் கூடுதல்), 350 சி.சி மேல் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2323 ஆகவும் (128 சதவீதம் கூடுதல்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போல் 7500 முதல் 12 ஆயிரம் வரை எடை கொண்ட சிறிய ரக லாரிகளுக்கு ரூ.24 ஆயிரத்து 190 ஆக (23 சதவீதம் கூடுதல்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எடை கொண்ட (6 சக்கர லாரிகளுக்கு) ரூ.32 ஆயிரத்து 367 ஆகவும் (12 சதவீதம் கூடுதல்) நிர்ணயிக்கபட்டுள்ளது.
20- 40 ஆயிரம் எடை கொண்ட 10, 12, 14 சக்கரங்கள் உள்ள வாகனங்களுக்கு ரூ.39 ஆயிரத்து 849 (26 சதவீதம் கூடுதல்) ஆகவும், 40 ஆயிரத்துக்கு மேல் எடை கொண்ட வாகனங்களுக்கு ரூ.38 ஆயிரத்து 308 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (இது கடந்த ஆண்டை விட 16 சதவீதம் கூடுதல்).
இதே போல் சிறிய ரக பயணிகள் சுற்றுலா பேருந்துகள், பயணிகள் சவாரி செய்யும் ஆட்டோ போன்ற வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை சுமார் 17 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.