கேரள மாநிலத்தில் சாதி, மதம் குறிப்பிடாமல் 1 லட்சத்து 24 ஆயிரத்து 147 மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்தகவல் குறித்து கேரள சட்டமன்றத்தில் உறுப்பினர் டி.கே.முரளி எழுப்பிய கேள்விக்கு, கல்வி அமைச்சர் சி.ரவீந்திரநாத் அளித்த பதிலில், “2017-18 கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள மாணவ, மாணவியரில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 630 பேர் தங்களது சாதியும் மதமும் குறிப்பிடவில்லை.
மேல்நிலை வகுப்பு முதலாம் ஆண்டில் 278 பேரும், இரண்டாம் ஆண்டு 338 பேரும் இதுபோல் சாதி மதம் என்கிற பகுதிகளை குறிப்பிடாமல் சேர்க்கை படிவம் கொடுத்துள்ளனர். தொழில்முறை கல்வி பயிலும் மாணவர்கள் சாதி, மதம் குறிப்பிடாமல் சேர்க்கப்படுவதில்லை.
இவை கடந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் 9 ஆயிரத்து 209 பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட விவரங்களாகும்” என்று தெர்வித்துள்ளார். இதில், 921 இஸ்லாமிய மாணவர்கள் தங்களது ஜாதி குறிப்பிட வேண்டிய இடத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், மதம் என்ற இடத்தில் ‘முஸ்லிம்’ என்று ஜாதிப் பிரிவில் ‘ஓபிசி’ என்றும் மட்டும் தெரிவித்துள்ளனர்.