40 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டு முதல்வராக ஆசைப்படுவதா? நிதிஷுக்கு லாலு கட்சி கேள்வி..

by எஸ். எம். கணபதி, Nov 12, 2020, 13:02 PM IST

பீகார் மக்கள் அளித்த தீர்ப்பு, நிதிஷ்குமாருக்கு எதிரானது என்று லாலுவின் ஆர்ஜேடி கட்சி கூறியிருக்கிறது. பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வர் நிதிஷ்மார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி, 125 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக 74 தொகுதிகளிலும், ஜேடியு 43 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வென்றிருக்கின்றன.லாலு மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணியில் ஆர்ஜேடி 75, காங்கிரஸ் 19 மற்றும் இடதுசாரிகள் 16 என்று 110 தொகுதிகளில் வென்றுள்ளன.

இதையடுத்து, பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஆர்ஜேடி கூட்டணியை விட பாஜக கூட்டணி வெறும் 0.03 சதவீத வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருக்கிறது. நூலிழையில்தான் நிதிஷ்குமார் ஆட்சி தப்பியிருக்கிறது.மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது 10 தொகுதிகளில் ஆர்ஜேடி கூட்டணி வெற்றியை மாற்றி அறிவித்துத் தேர்தல் அதிகாரிகள் முறைகேடு செய்ததாக ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோகர் ஜா கூறியிருந்தார்.

இந்நிலையில், மனோகர் ஜா இன்று அளித்த பேட்டியில், மக்களின் தீர்ப்பு,நிதிஷ்குமாருக்கு எதிரானது. நிதிஷ்குமார் வெறும் 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று விட்டு, மீண்டும் முதல்வராக ஆசைப்படுகிறார். மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு. அதை மதிக்க வேண்டும். நீங்கள்(நிதிஷ்குமார்) தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தால், அது உங்களுக்கு எதிரானது என்பதை உணர்வீர்கள். அப்படியும் முதல்வர் பதவி மீது நீங்கள் ஆசைப்பட்டால், அந்த மாயை எப்போது உடையும் என்று கடவுள் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை