திருப்பதி நகரில் குழந்தையை வைத்து பிச்சை எடுப்பதுபோல் கடைக்குள் நுழைந்த வடநாட்டு பெண்கள் இரண்டரை லட்சம் ரூபாயை பணம் கொள்ளை. சிசிடிவி காட்சிகளை வைத்து பெண் கும்பலை தேடி வரும் குற்றப்பிரிவு போலீசார். ஆந்திர மாநிலம் திருப்பதி நகரில் எப்போதும் பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்திப்பு அருகே ஒரு கடையில் பிச்சை கேட்பது போல் நேற்று மதியம் 3 பெண்கள் ஒரு சிறுமியுடன் சென்றுள்ளனர். கடை உரிமையாளர் செல்போனை பார்த்துக்கொண்டே இவர்களுக்கு காசு கொடுத்துள்ளார். அப்போது அவர்கள் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அதற்குள்ளாக மூன்று பெண்களும் உரிமையாளரை சுற்றி நின்று கொண்டனர் அப்போது அவர்களுடன் வந்த சிறுமி மெதுவாக பணமிருக்கும் பெட்டி அருகே சென்று அங்கிருந்த இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனை கவனிக்காத கடை உரிமையாளர் மாலையில் பணத்தை சரி பார்க்கும் போது பணம் இல்லாதது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பிச்சை எடுக்க வந்த கும்பல் பணம் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு புகார் செய்யப்பட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கடைக்கு வந்து கொள்ளையடித்த பெண்களை தேடி வருகின்றனர். சமீப காலமாக வட மாநிலங்களிலிருந்து வரும் இத்தகைய பெண்கள் குழந்தையுடன் வைத்து பிச்சை எடுப்பது, போர்வைகள் விற்பது போல திருட்டில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது என திருப்பதி நகர வர்த்தகர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்