இசையமைப்பாளர்களாகும் நடன இயக்குனர் வாரிசுகள்..

by Chandru, Nov 13, 2020, 18:35 PM IST

நடன இயக்குனர் வாரிசுகள் திரையுலகில் சாதனை புரிந்து வருகின்றனர். டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மகன் பிரபு தேவா நடனம் நடிப்பு இயக்கம் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரது தம்பி ராஜூ சுந்தரமும் நடிப்பு நடனம் என்று இந்தியா முழுவதும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் மற்றொரு நடன இயக்குனர் வாரிசுகள் இசைத் துறைக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழித் திரைப்படங்களிலும் பிரபல நடன இயக்குநராக வலம் வந்தவர் ரகுராம் மாஸ்டர். அவர் நம்முடன் இல்லை. ஆனால், அவரின் கலைப் பயணம் அவரது பேரன், பேத்தி வாயிலாக மீண்டும் தொடங்கியுள்ளது. ரகுராம் மாஸ்டர்- கிரிஜா ரகுராமின் மகள் சுஜா. இவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சுஜாவுக்கு, திரிசூல் ஆர். மனோஜ், சனா மனோஜ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

தங்களது தாத்தா வகுத்த கலைப்பாதையில் தடம் பதிக்கத் தயாராகிவிட்டனர் இளங் கலைஞர்கள் திரிசூல் மனோஜ், சனா மனோஜ். இசையமைப்பாளராக, நடிகராக அறிமுகமாகிறார் திரிசூல் மனோஜ். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் என்.முரளி கிருஷ்ணனிடம் கலை பயின்ற திரிசூல் மனோஜ், தீபாவளி சிறப்பாக 'தீபாவளி ஆந்தம்' (Diwali Anthem) என்ற தனிப்பாடலை வெளியிட்டுகிறார். இதற்கு திரிசூல் மனோஜ் இசையமைத்து நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். அமெரிக்காவின் இளம் கலைஞர்களான திரிசூல் ஆர்.மனோஜ், சனாதனி, இஷான், நம்ரிதா ஆகியோர் பாடலை இணைந்து பாடியுள்ளனர். விரைவில் இந்தப் பாடல் உங்கள் காதுகளில் தென்றலில் கலந்து தழுவ வருகிறது. திரைப்படங்களுக்கும் இவர்கள் வரவுள்ளனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை