அத்துமீறிய பாகிஸ்தான்... காஷ்மீரில் பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

indian army killed 8 pakistan army mens at kashmir

by Sasitharan, Nov 13, 2020, 19:55 PM IST

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது வாலாட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. இன்று காஷ்மீரின் பூஞ்ச், உரி, கெரன் செக்டர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அத்துமீறி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடந்த இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சார்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் பதிலடியால் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் முறியடிக்கப்பட்டது.

இந்தியாவின் பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். அதேவேளையில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதேபோல் பொதுமக்களில் 3 பேர் உயிரிழக்க நேர்ந்தது. இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவம் இன்னும் தங்கள் உயிரிழப்பு என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வருவதை அடுத்து பாகிஸ்தான் ராணுவ தரப்பில் தாக்குதல் நடந்ததால் எதிர் தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்துள்ளது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை