கோல்ஃப் மைதானத்தினுள் ஊர்ந்து வந்த உயிரினத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலர் அது டைனசோர் போல பிரமாண்டமாக இருப்பதாக பின்னூட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஃப்ளோரிடா மாகாணத்தில் நேப்பிள்ஸ் என்ற இடத்தில் நடந்துள்ளது. ஃப்ளோரிடோவில் எட்டா என்ற புயல் வீசியது. கடந்த புதன்கிழமை வாலென்சியா கோல்ஃப் மற்றும் கவுன்ட் கிளப் மைதானத்தில் பிரமாண்டமான உயிரினம் ஒன்று ஊர்ந்து சென்றதை டைலர் ஸ்டோல்ட்லிங் என்பவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
ஃப்ளோரிடாவில் அலிகேட்டர் என்னும் முதலைகள் அதிகம் உள்ளன. ஏறக்குறைய 12 லட்சத்து 50 ஆயிரம் முதலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கோல்ஃப் மைதானத்திற்குள் வந்த இந்த முதலை வழக்கத்தை காட்டிலும் மிகப்பெரிதாக உள்ளது. அலிகேட்டர் எனப்படும் அமெரிக்க முதலைகள் மீன்கள், ஊர்வன, பறவைகள், சிறிய பாலூட்டிகள் ஆகியவற்றை உண்ணும். வாலென்சியா கோல்ஃப் மற்றும் கவுன்டி கிளப் இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. புயல் வீசும் தருணத்தில் காற்றுடன் கூடிய மழையில் டைனசோர் போன்று பிரமாண்டமான முதலை மைதானத்தை கடந்து செல்வது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.